பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள் பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய் தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும் தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும் அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே