பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே