பரமாகிச் சூக்குமமாய்த் துலெ மாகிப் பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம் சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித் திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச் சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி அரமாகி ஆனந்த போத மாகி ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே