பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய் உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும் தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி