பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர் பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர் இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார் இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர் உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர் திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே