பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப் பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம் எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம் தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம் தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத் தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே