பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது பாததா மரைகளுக் கன்பு புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள் தணிகைவாழ் சரவண பவனே