பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல் இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன் எரிந்திட எயில்முன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே