பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர் புடையானை நெஞ்சமே போற்று