பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில் புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும் விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே