பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள் உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன் கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத் துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்