பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள் தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள் நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார் நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே