பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின் பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித் திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத் திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர் வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம் வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி