பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும் உற்றறிதற்() கரியஒரு பெருவெளிமேல் வெளியில் ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள் பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்() அரசே கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே () உற்றிடுதற் - படிவேறுபாடு ஆ பா () பிறங்கவைத்த - முதற்பதிப்பு பொ சு, ச மு க