பாடல் எண் :1109
பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
மற்று நோக்கிய வல்வினை அதனால்
வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
ஒற்றி மேவிய உலகுடை யோனே
பாடல் எண் :1849
பற்று முடித்தோர் புகழொற்றிப்
பதியீர் நுமது பசுவினிடைக்
கற்று முடித்த தென்னிருகைக்
கன்று முழுதுங் காணென்றேன்
மற்று முடித்த மாலையொடுன்
மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
திற்று முடித்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :2655
பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.