பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச் செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன் நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே