பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப் பற்றி நின்றதில் பயன்எது கண்டாய் பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித் தொழுது சண்முக சிவசிவ எனநம் தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன் பழுது சொல்லுதம் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே