பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப் பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன் புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய் விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும் மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே