பவநெறி செலுமவர் கனவினும் அறியாப் பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே நான்அருள் நிலைபெற நல்கிய நலமே சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே தனிநட ராசஎன் சற்குரு மணியே