பாடல் எண் :2595
பவமான எழுகடல் கடந்துமேற் கதியான பதிநிலை அணைந்து வாழப்
பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையுந் தடாத படிஓர்
தவமான கலனில்அருள் மீகாம னால்அலது தமியேன் நடத்த வருமோ
தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச் சரணமே சரணம் அருள்வாய்
உவமான மற்றபர சிவமான சுத்தவெளி உறவான முத்தர் உறவே
உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே
அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே
பாடல் எண் :2607
பவமான எழுவகைப் பரப்பான வேலையிற் பசுவான பாவிஇன்னும்
பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப் படராது மறையனைத்தும்
உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை உற்றதனை யொன்றிவாழும்
உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவானநல்
தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரிஈ ா௽௉஢௸ி஢ந௉ ி஡ொ஦ூ௸௄஡௵
தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த தற்பரர்க ளகநிறைந்தே
அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை அடியனுக் கருள்செய்குவாய்
அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.