பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல் தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே