பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும் பாவியேன் தன்முகம் பார்த்திங் கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ் இருந்திடென் றுரைப்பதெந் நானோ சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த தெள்ளிய அமுதமே தேனே குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே