பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார் தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே