பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல் ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான் தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே திருச்சிற்றம்பலம் ஆற்றா விரகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்