பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப் பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும் வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும் தேங்குபர மானந்த வெள்ள மேசச் சிதானந்த அருட்சிவமே தேவே தேவே