பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார் வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே
பாடல் மறைகளோர் கோடி - அருட் பாத உருவ சொரூபங்கள் பாடி தேட இருந்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி