பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய பதகர்பால் நாள்தொறும் சென்றே வாடிநின் றேங்கும் எழையேன் நெஞ்ச வாட்டம்இங் கறிந்திலை என்னே ஆடிநீ றாடி அருள்செயும் பரமன் அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே