பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப் பத்தரொடு முத்தரெலாம் பார்த்தாடப் பொதுவில் ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன் அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால் வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன் மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே