பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக் கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே