பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில் நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன் கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார் குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே