பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப் பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத் தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம் செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே