பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட் சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- இறை பொறுப் பியம்பல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்