பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே