பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச் சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித் தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே() ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான் அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே () எனவே - முதற்பதிப்பு, பொ சு, பி இரா