பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச் சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார் வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத் தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே