பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர் பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார் வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே எம்முடம் புன்னை() இணைந்திங் கெமக்கே ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா () எம்முடம் பும்மை - ஆ பா பதிப்பு,