பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப் பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய் இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய் நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய் நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய் ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்