பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்ததும் எளியேன் பாடனைத்தும் தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே