பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும் உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே