பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப் பள்ளித் தலைவ ரொற்றியினின் றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன் சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ