பாலானைத் தேனானைப் பழத்தி னானைப் பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக் காலானைக் கலைசாகாத் தலையி னானைக் கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே