பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர் ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார் மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே