பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர் கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின் பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எதற்கே