பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும் சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக் கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே