பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப் பாலதோ பால்உறா அதுவோ ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ மேல்வகை யாதோ எனமறை முடிகள் விளம்பிட விளங்கும்ஓர் தலைவன் மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான் வள்ளலைத் தடுப்பவர் யாரே