பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித் தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல் காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும் யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே