பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள் பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ மாவல்வினை யுடன்மெலிந்திங் சூழல்கின் றேன்நின் மலர்அடியைப் பேற்றேன்என் மதிதான் என்னே தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம் தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே