பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும் சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே