பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில் இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய் பச்சை மாமயில் பரம நாதனே கச்சி நேர்தணி கைக்க டம்பனே
பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப் பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும் இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல் இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர் செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண் துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே