பித்தப் பெருமாள் சிவபெருமாள் பெரிய பெருமான் தனக்கருமைப் பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே முவர்க் கருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே